வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை என்று கேட்ட நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுவீர்: என்ஜிஓ கோரிக்கை

ikh1.5 மில்லியன்  வங்காள  தேசத்  தொழிலாளர்கள்  தேவை  என்று  நிறுவனங்கள்  கேட்டிருப்பதாகக் கூறும்  உள்துறை  அமைச்சு  அந்த  நிறுவனங்களின்  பட்டியலை  வெளியிட  முடியுமா  என்று  சிறிய,  நடுத்தர  தொழில்முனைவர்  கூட்டமைப்பு(இக்லாஸ்)  சவால்  விடுத்துள்ளது.

1.5 வங்காள  தேசத்  தொழிலாளர்கள்  வருவதைத்  தொடக்கத்திலிருந்தே  இக்லாஸ்  எதிர்த்து  வந்துள்ளது.

“நீங்கள்  வெளிப்படைத்தன்மையுடன்  நடந்துகொள்வது  உண்மையாயின்  (தொழிலாளர்களுக்குக்  கோரிக்கை  விடுத்துள்ள)  நிறுவனங்கள்,  துறைகள்,  தொழிற்சாலைகள்  எவை  என்பதைத்  தெரியப்படுத்துங்கள்”, என  இக்லாஸ்  தலைவர்  முகம்மட்  ரிட்சுவான்  அப்துல்லா  கூறினார்.

இளைஞர்களை  இழிவுபடுத்திய  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியையும்  அவர்  சாடினார்.

“நாட்டின்  பெயரையும்  பிரதமர்  பெயரையும்  கெடுக்காதீர்.  இளைஞர்களை  இழிவுபடுத்த  வேண்டாம்”,  என்றாரவர்.

அழுக்கான  வேலைகளைச்  செய்ய  மலேசிய  இளைஞர்கள்  தயாராக  உள்ளனர்  என்பதை  முகம்மட்  ரிட்சுவான்  சுட்டிக்காட்டினார்.  அவர்களில்  பலர்   வெளிநாடுகளில்  அந்த  வேலைகளைச்  செய்கிறார்கள்.  ஏனென்றால்  அங்கு  நல்ல  சம்பளம்  கிடைக்கிறது  என்றார்.