ஸெட்டி அஹ்தார் அசீஸ் பணி ஓய்வு பெற்ற பின்னரும் பேங்க் நெகாரா சுயேச்சையாகத்தான் செயல்படும்.
ஸெட்டி தாமே இந்த உத்தரவாதத்தை அளித்தார்.
“பேங்க் நெகாரா இதுவரை சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வந்துள்ளது”, என்று இன்று காலை சஜானா கிஜாங்கில் சந்தித்தபோது அவர் கூறினார்.
தமக்குப் பிறகு அரசியல்வாதி எவரும் பேங்க் நெகாராவுக்குத் தலைமை தாங்குவார் என்ற கவலை வேண்டாம் என்றாரவர்.
“நிதிக்கழகங்களின் நிர்வாக வாரியத்தில்கூட அரசியல்வாதிகள் இல்லை அப்படியிருக்க மத்திய வங்கிக்கு எப்படி அரசியல்வாதி ஒருவர் பங்கேற்க முடியும்”. பேங்க் நெகாரா ஆளுநராக அரசியல்வாதி ஒருவர் அமர்த்தப்படும் சாத்தியம் உண்டா என்று கேட்கப்பட்டதற்கு ஸெட்டி இவ்வாறு பதிலளித்தார்.
நம்பிக்கை அவநம்பிக்கையாகும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
நம்பிக்கை நாயகனையே நம்ப முடிய வில்லை. நம்பி நம்பித்தான் நாம் நட்டாற்றில் தத்தளிக்கிறோம்-குறிப்பாக நம்மினம்.
யாருடைய தலையீடும் இல்லாமல் தன்னிச்சையாகத்தான் செயல் பட்டு வந்தீர்கள் அப்படிதானே….?
நாங்களும் அப்படித்தான் மறதியாக நம்புகிறோம்!