15 ஆண்டுகளாகிவிட்டன, தொழிலாளர்கள் வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை

 

no house yetகுறைந்த விலை வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்களில் 2001 ஆம் ஆண்டில் கையொப்பட்ட மொத்தம் 64 குடும்பங்கள் இன்று அக்குறைந்த விலை வீடு மேம்பாட்டாளருக்கு எதிராக போலீஸ் புகார் செய்தனர்.

கோலகுபு பாரு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அவர்கள் மொத்தம் 76 புகார்களைப் பதிவு செய்தனர்.

கடந்த 15 வருடங்களாக அந்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் துன்பகரமான நிலையை எழுப்பி வந்துள்ளனர். ஆனால், இப்போதுதான் முதல்முறையாக அவர்கள் ஒன்றுகூடி அவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகான முன்வந்துள்ளனர் என்று மலேசிய சோசலிசக் கட்சியின் எஸ். அருட்செல்வன் கூறினார்.

ரிம25,000 மதிப்புடைய அக்குறைந்த விலை வீட்டை வாங்குவதற்கான பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் வீடொன்றுக்கு ரிம2,500 முன்பணமாகக் கட்டினர். ஆனால், வீடு கட்டப்படவில்லை என்று அருட்செல்வன் தொடர்பு கொண்ட போது கூறினார்.

அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தல் காலங்களில் வாக்குறுதியளித்திருந்தன. ஆனால், எதுவும் நடக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலையில் இல்லை. மேலும், அந்த மேம்பாட்டாளர் நிறுவனம் திவாலாகிpsm விட்டது.

அவர்கள் இப்போது ஓர் அரசிய்ல் தீர்வுக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு சில ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் வீட்டை பெறும் வரையில் அந்நிலத்தில் வேறெந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது என்று அருட்செல்வன் தெரிவித்தார்.

மேலும், அந்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலை சிலாங்கூர் மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. கணபதிராவ் அத்தொழிலாளர்களை அடுத்த வாரம் சந்திக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது என்றும் எஸ். அருட்செல்வன் கூறினார்.