மகாதிர்: நான் நஜிப்பைக் குறை சொல்லலாம், லியோங் சிக் சொல்லக்கூடாதா?

ling drmபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறை  சொல்ல  தமக்கு   உரிமை  வழங்கப்படும்போது  முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  லிங்  லியோங்  சிக்குக்கு  அது  வழங்கப்படாதது  ஏன்  என்பதைத் தம்மால்  புரிந்து  கொள்ள  முடியவில்லை  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறியுள்ளார்.

நஜிப்பின்  அவதூறு  வழக்கைத் தள்ளுபடி   செய்யக்  கோரி  லிங்  செய்துள்ள  மனுவுக்கு  ஆதரவாக  சம்ர்பித்த  உறுதிமொழி  பத்திரத்தில்  மகாதிர்  இவ்வாறு  குறிப்பிட்டார்.

தம்முடைய  விமர்சனங்களை  ஏற்றுக்கொள்வதாக  பிரதமர்,  லிங்கின்  உரிமைக்  கோரிக்கைக்கு  அளித்த  பதிலில்   குறிப்பிட்டிருப்பதைச்  சுட்டிக்காட்டிய  மகாதிர்  அது, “….பேச்சுரிமை  உள்ளது  என்பதைக்  காட்டும்  ஆரோக்கியமான  அறிகுறி”, என்றார்.

“ஆனால், கருத்து  சொல்ல  எனக்கு  வழங்கப்படும்  உரிமை  லிங்குக்கு வழங்கப்படாதது  ஏன்  என்பதுதான்  புரியவில்லை”, என தம்முடைய  உறுதிமொழி  பத்திரத்தில்  கூறினார்.