கஞ்சா பற்றிய கட்டுரையை டிவிட்டரில் மறுபதிவு செய்த கேஜே-க்கு கண்டனம்

kjஇளைஞர்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்  மலேசியாவில்  கஞ்சா  பயன்படுத்துவதைக்  குற்றமெனக்  கூறும்  சட்டத்தை  அகற்ற  வேண்டும்  என்று  மொழிந்ததைத்  தம்  டிவிட்டர்  பக்கத்தில்  எடுத்துரைத்த  இளைஞர்,  விளையாட்டுத்  துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடினை  அம்னோ- ஆதரவு  இணையத்தளமான MyKMU சாடியுள்ளது.

அந்தக்  கருத்தை  தம்  டிவிட்டர்  பக்கத்தில்  வெளியிட்ட  அமைச்சரின்  செயல்  “அதிர்ச்சி”  அளிப்பதாகக்  குறிப்பிட்ட  அந்த  இணையத்தளம்,  அது  கைரி  அக்கருத்தை  வரவேற்கிறார்  என்ற   தப்பான  எண்ணத்தைத்  தோற்றுவித்து  விடலாம்  எனவும்  எச்சரித்தது.

போகிற  போக்கைப்  பார்த்தால் ‘Fit Malaysia’-வைத்  தொடங்கி ஆரோக்கியமாக  இருப்பதை  ஊக்குவித்து  வரும்   கைரி  இனி, ‘Pit Malaysia’திட்டத்தைத் தொடங்கி  கஞ்சாவுக்கு  பரிந்து  பேச  முனைந்தாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை  என  அது  கிண்டல்  செய்திருந்தது.