மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) உறுப்பினர்கள் சுமார் 50 பேர், அடுத்த மூன்றாண்டுகளில் 1.5 மில்லியன் வங்காள தேசத் தொழிலாளர்களைக் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க இன்று மனிதவள, உள்துறை அமைச்சுகளுக்குமுன் கூடினர்.
இன்று காலை மணி 10.30க்கு அவர்கள் அமைச்சகங்களுக்குள் சென்று மகஜர் கொடுக்க முனைந்தனர். அவர்களை உள்ளே செல்ல விடாமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
அதனால் அமைச்சுகளுக்கு வெளியிலேயே அவர்கள் மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
“நாங்கள் வங்காள தேசிகளாக இருந்திருந்தால் சந்தித்திருப்பார்கள்”, என எம்டியுசி இடைக்காலத் தலைவர் அப்துல்லா சனி அப்துல் ஹமிட் குத்தலாகக் கூறினார்.
15-நிமிடம் கழித்து இரு அமைச்சுகளின் பிரதிநிதி ஒருவர் வந்து அவர்காளிடமிருந்து மகஜர்களைப் பெற்றுக் கொண்டார்.
ஏதும் நியாயமாக நடக்காவிட்டால் இது தான் நடக்கும்.
தொழிற்சங்க பொறுப்பாளர்கள் இரண்டாயிரம் பேர்களை அலைதுச் சென்றிந்தால் ஓரளவாது அமைச்சர்கள் அசைந்து கொடுத்திருப்பார்கள் போனது 50 பேர் அதனால் அலட்சியம் காட்டிவிட்டார்கள்…?
MTUC உங்களை நம்பலாமா ? அல்லது வாயாங் காட்ட சென்றீரா ?
அரசாங்கத்துக்குவங்காள தேசிகள் மிது ஏன் இவளவு பாசம் ஏனென்றால் அவர்கள் இஸ்லாமியர்கள் ,ஏன் இந்தியர்கள் 1.5 million ,சீனர்கள் 1.5, million பேர்களை வரவழைக்க கஉடாது????????????$$$$$$$$$$$$$$$$.
இங்கேதான் இனவாதம் தலைவிரித்தாடுகிறது.நாளை மலேசியா அமைச்சரவையிலும் வங்க்காளதேசிகள் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.