2015-இல் ஐந்து விழுக்காடு வளர்ச்சியைப் பதிவுசெய்த மலேசியப் பொருளாதாரத்துக்கு உடனடி எதிர்காலத்தில் பல சவால்கள் காத்திருப்பதாக பேங்க் நெகாரா மலேசியா(பிஎன்எம்) கூறுகிறது.
“நாட்டுக்கு வெளியில் உறுதியற்ற நிலை நிலவுவதாலும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பல சீரமைப்புகள் செய்யப்படுவதாலும் வளர்ச்சி இறங்குமுகமாகலாம்”, என மத்திய வங்கி இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
உள்நாட்டுத் தேவையும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் வளர்ச்சியை ஊக்குவித்தாலும் வளர்ச்சியின் வேகம் மிதமாகவே இருக்கும் என்று அது கூறிற்று.
மலேசிய பொருளாதாரத்தை நிலைநிறுத்த GST யும், வங்காள தேசிகளின் லெவியும் போதுமே.
அம்னோ ஆட்சி தொடர்ந்தால்,பொருளாதார வீழ்ச்சியும் தொடரும்.
வங்காளதேசிகளால் பணம் அங்கு போய்விடும்
மலேசியர்களுக்கு கிடைத்த அற்புத அரிசந்திர புத்திசாலி அமைச்சரவை.அதன் விளைவு நாணய மதிப்பு சரிவு,சேவை வறி வசூல்,லட்சகணக்கில் அந்நிய தொழிலாளி இறக்குமதி செய்து மலேசியர்களை புறக்கணிப்பது புத்திசாலி அமைச்சரவையின் செயல்பாடுகள்.