பிரதமர்: மேற்கொண்டு பட்ஜெட் சீரமைப்பு தேவையில்லை

recaகச்சா  எண்ணெய்  விலை  பீப்பாய்க்கு  யுஎஸ்$30-க்கும் யுஎஸ்$40-க்குமிடையில்  நிலைத்திருக்கும்  என்று  தோன்றுவதால்  2016  பெட்ஜெட்டை  மேலும்  சீரமைக்க  வேண்டிய  அவசியம்  இருக்காது  என்று  நஜிப்  அப்துல்  ரசாக்  நினைக்கிறார்.

கச்சா  எண்ணெய்  விலை  பீப்பாய்க்கு  யுஎஸ்$30-க்கும்  கீழே  குறையுமானால்  பட்ஜெட்டை  மேலும்  சீரமைப்பது  பற்றி  அரசாங்கம்  ஆலோசிக்கக்  கூடும்  எனப்  பிரதமர்  கூறினார்.

“எண்ணெய்  விலை  சிறிது  காலத்துக்கு  யுஎஸ்$30-க்கும்  யுஎஸ்$40-க்குமிடையில்  நிலைத்து  நிற்கும்போல்  தோன்றுகிறது”, என  சென்  பிரான்சிஸ்கோவில்  செய்தியாளர்களிடம்  பிரதமர்  தெரிவித்தார்.