1.5 மில்லியன் வங்காள தேசத் தொழிலாளர்கள் என்பது சரியல்ல என்கிறார் அமைச்சர்

Richardமலேசியா  1.5 மில்லியன்  தொழிலாளர்களை  வங்காள  தேசத்திலிருந்து  அழைத்து  வரப்போவதாகக்  கூறப்படுவதை  மறுக்கிறார்  மனித  வள  அமைச்சர்  ரிச்சர்ட்  ரியோட்.

இன்று  செய்தியாளர்  கூட்டம்  ஒன்றில்  பேசிய  ரிச்சர்ட்   1.5 மில்லியன்  வங்காள  தேசத்  தொழிலாளர்கள்  கொண்டுவரப்படுவர்  என்று  பரவலாக  பேசப்படுவது  “சரியல்ல”  என்றார்.

1.5 மில்லியன்  என்பது  வெளிநாடுகளில்  வேலை  செய்வதற்குப்  பதிவு  செய்து  கொண்டிருக்கும்  வங்காள  தேசத்  தொழிலாளர்  எண்ணிக்கை  ஆகும்.

“அவ்வளவு  பேரை  நாம்  வேலைக்கு  அழைத்து  வரப்போவதில்லை. வங்காள  தேசம்  139  நாடுகளுக்குத்  தொழிலாளர்களை  வேலைக்கு  அனுப்புகிறது”, என்றாரவர்.

1.5 மில்லியன்  என்ற  எண்ணிக்கையைக்  குறிப்பிட்டவர்  உள்துறை அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடிதான்  என்பதைச்  சுட்டிக்காட்டியதற்கு, “அவர்  அப்படி கூறியிருந்தாலும்  1.5 மில்லியன்  என்பது  வெளிநாடுகளில்  வேலை  செய்ய  பதிவு  செய்து  கொண்டிருக்கும்  வங்காள  தேசத்  தொழிலாளர்  எண்ணிக்கைதான்  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன்”, என  ரிச்சர்ட்  கூறினார்.