குவான் எங்: முதுகில் குத்துவோர் தரமற்றோர்

backஒரு  குழுவாக  இருந்து  எடுக்கப்பட்ட   நிலைப்பாட்டுக்கு  முதலில்  ஒத்துக்கொண்டு  பிறகு  கருத்தை  மாற்றிக்கொள்வோருக்கு  மதிப்புமில்லை, மரியாதையுமில்லை  என  பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

பக்கத்தான்  ஹராபானில் “கெளரவமிக்க  ஆண்களும்  பெண்களும்”  ஒரு  குழுவாக  செயல்படுகிறார்கள்.  அதனால்தான்  ஒரு  மாநிலத்தை  ஆளவும் நிர்வாகம்  சம்பந்தப்பட்ட  முடிவுகள்  எடுக்கவும்  முடிகிறது  என்றாரவர்.

“நாம்  முதுகில்  குத்துவதில்லை. அப்படிச்  செய்யும்  ஒருவர்- கூட்டத்தின்  கருத்துக்கு  ஒப்புக்கொண்டு  பிறகு  வேறு முடிவு  எடுப்பவர்-  தரமற்றவர்  ஆவார்”.  நேற்றிரவு  தம்  மாநிலச்  சட்டமன்றத்  தொகுதியில்  நடைபெற்ற  சீனப்  புத்தாண்டுக்  கொண்டாட்டத்தில்  லிம்  உரையாற்றினார்.

பினாங்கில் இரண்டு  பிகேஆர்  பிரதிநிதிகள்  அரசுதொடர்புடைய  நிறுவனங்களில்   அவர்கள்  வகித்துவந்த  இயக்குனர்  வாரியப்  பதவியிலிருந்து  தூக்கப்பட்டது  சர்ச்சையை  உண்டு  பண்னியுள்ள  வேளையில்  லிம்  இவ்வாறு  கூறியுள்ளார்.