எதிரணியிடம் ஒத்த கருத்தில்லை, பிறகு எப்படி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவது?

sameஉங்கள் கருத்து:  ‘ஐயா,  நீங்கள்  உங்களுக்குள்ளேயே  முட்டி  மோதிக் கொள்கிறீர்கள். பேசாமல்  பக்கத்தான்  ஹராபானைக்  கலைத்து  விடுங்கள்’.

இயக்குனர்  பதவிகளை  இழந்த  பிகேஆர் மாநிலச்  சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு  பிகேஆர்  ஆதரவு

அடிப்படையை ஆராய்வோன்:  பிகேஆர்  பிரதிநிதிகள்  தம்மைச்  சந்தித்தபோது  ஓன்றைச்  சொன்னதாகவும்  பிறகு  சட்டமன்றத்தில்  வேறு  விதமாக  நடந்து  கொண்டதாகவும்  பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்  கூறுகிறார்.

இது  பிகேஆர்  ஒரு  நம்பத்தக்க  பங்காளி  அல்ல  என்பதைதான்  காண்பிக்கிறது.

நியாயவான்  தியான் சுவா:  கருத்து  வேறுபாடு  இருந்தால்  அதை முதலில்  பேசித்  தீர்த்துக்கொள்ள  வேண்டும். வாக்களிப்பிலிருந்து  ஒதுங்கிக்  கொள்ளுமுன்னர்  இதை  ஏன்  செய்யவில்லை?

என்என்எப்சி:  எதிரணி  புத்ரா  ஜெயாவைப்  பிடிக்க  வேண்டும்  என்பதற்காக  மக்கள்  படாத  பாடு  படுகிறார்கள். பங்காளிக்  கட்சிகளுக்கிடையில்  ஒத்துழைப்புதான்  தேவை. இது,  தேவையில்லை.

பொல்லாதவன்: பிகேஆர்  துணைத் தலைவர்  அஸ்மின்  அலி  அவர்களே,  உங்கள்  உறுப்பினர்களுக்குச்  செல்லம்  கொடுத்து  கெடுக்காதீர்கள்.  உங்கள்  ஐந்து  பிரதிநிதிகள்  டிஏபி-யுடன்  ஒத்துழைக்கவில்லை.  அவர்களுக்கு  எதிராக  என்ன  நடவடிக்கை  எடுத்தீர்கள்? டிஏபி-யுடன்  அதைப்  பற்றி  விவாதித்தீர்களா? அந்த  ஐவரையும்  விசாரித்தீர்களா?

உங்கள்  கொறடா  ஜோகாரி  அப்துல்,  அவர்கள்  மனசாட்சிப்படி  நடந்து  கொண்டிருக்கிறார்கள்  என்று  அவர்களின்  செயலுக்கு  வக்காலத்து  வாங்குகிறார்.

பிகேஆர்,  பக்கத்தான்  ஹராபானில்  இருக்கிறதா  அல்லது  தனித்து  இயங்குகிறதா?

நல்லா  இருங்க:  பினாங்கு  முதல்வர்  என்ற  முறையில்  தம்  நம்பிக்கையை  இழந்தவர்களை  இயக்குனர்  பதவியிலிருந்து  தூக்கும் உரிமை  குவான்  எங்குக்கு  உண்டுதான்.  ஆனால்,  13வது  பொதுத்  தேர்தலை  வெல்வதற்கு  பிகேஆரும்  உதவியாக  இருந்தது  என்பதை  அவர்  மறந்து  விட்டார்போல்  தெரிகிறது.

இரு  சட்டமன்ற  உறுப்பினர்களின்  இயக்குனர்  பதவிகளைப் பறித்தது  குவான்  எங்  சர்வாதிகாரிபோன்று  நடந்து  கொள்கிறார்  என்று  அவரின்  விமர்சகர்கள்  குறைகூறுவதை  நிரூபிப்பதுபோல்  உள்ளது.

பெயரிலி:  வாக்களிப்பில்  கலந்துகொள்ளாத  அந்த  ஐவரும்  பிகேஆரின்  எந்தத்  தலைவரிடமிருந்து  தங்களுக்கு  உத்தரவு  வந்தது  என்பதைத்  தெரிவிக்கவில்லை.  இது  குறித்து  விளக்கமளிக்க  தியான்  சுவாவும்  அஸ்மின்  அலியும்  கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஜாகோ: குவான்  எங்  காரணத்தோடுதான்  அப்படிச்  செய்திருப்பார். அஸ்மின்  காரணத்தைத்  தெரிந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டுப்  பேசி  விட்டு  பிறகு  நொந்துகொள்ளக்  கூடாது.

கெங்: அஸ்மின்,  நீங்கள்  சிலாங்கூரை  ஆட்சி  செய்கிறீர்கள்.  பினாங்கை  விட்டு  விடுங்கள்.

ரிக்  தியோ: பிகேஆர்  தனித்து  செயல்பட  முடியாது.  பக்கத்தான்  முடிவுக்கேற்பவே  அது  ஆட  வேண்டும். ஒரு  முடிவு  செய்யப்பட்டதென்றால்  அனைவரும்  அதன்படிதான்  வாக்களிக்க  வேண்டும்.

மேபல்சிரப்: டிஏபி  பிரதிநிதிகளின்  ஆதரவால்  ஆட்சிப்  பீடத்தில்  அமர்ந்திருக்கிறார். ஆனாலும்,   அஸ்மின் பாஸுக்கு  ஆதரவாகத்தான்  நடந்து  கொள்வார். இப்போது  பிகேஆர்  இருவருக்கு  ஆதரவாகக்  குரல்  கொடுக்கிறார். இப்படிப்பட்ட  கூட்டாளிகள்  இருக்கும்போது  பக்கத்தானை  அழிக்க  அம்னோ  எதற்கு?

முகமூடி: பக்கத்தான்  ஹராபான்  கூட்டணியைக்  கலைத்து  விடுவதே  நல்லது.   உங்களுக்குள்ளேயே  முட்டி  மோதிக்  கொள்கிறீர்கள்-  பிறகு  எப்படி  புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்றப்  போகிறீர்கள்?

அஸ்மின்,  நீங்கள்  நஜிப்பிடம்  பாடம்  கற்றுக்கொள்ள  வேண்டும்.  தலைவருக்கு  எதிராகச்  செயல்படுவோரைப்  பதவியிலிருந்து  அகற்ற  வேண்டும்  அல்லது  ஒட்டுமொத்தமாக  வெளியேற்ற  வேண்டும். பிகேஆர்  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசாரைப்  பதவியிலிருந்து  அகற்றியது  ஏன்  என்பதை  எண்ணிப்  பாருங்கள்.  அவர்  கட்சிக்  கொள்கைக்கு  எதிராக  நடந்து  கொண்டார்,  இல்லையா?

இப்போது  மட்டும்  ஏன்  இந்த  இரட்டை  நியாயம்?

ஹம்சா:  அஸ்மின் மற்றொரு  தவணைக்  காலத்துக்கு  எம்பி-ஆக  இருக்க  முடியும்  என்று  நான்  நினைக்கவில்லை.  அவரது  செயல்களில்  முரண்பாடு  காணப்படுகிறது.. அவர்  எதிரணிக்  குரலாக  திகழ்ந்த  காலம்  போய்விட்டது.  அவர்  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  பக்கம்  போனால்கூட  ஆச்சரியப்படுவதற்கில்லை.

பெயரிலி #03815719:  அஸ்மின்  உண்மையைச்  சொல்லுங்கள்-  உங்கள்  ஆள்கள்  இருவர்  அம்னோவுக்கு  ஆதரவாக  வாக்களித்துள்ளனர்.  உங்கள்  அரசில்  இப்படி  நடந்தால்  பொறுத்துக்கொள்வீர்களா?

ஆய்வாளன்:  குழுவாக  இருந்து  செயல்பட  வேண்டும்  என்று  கூறுவதெல்லாம்  வீண்  அபத்தம்.   உண்மையில்,  இந்தக்  குழுவை  ஒன்றாக  பிடித்து  வைத்துக்கொள்ள எதுவுமே  இல்லை.  ஒரு  பொதுவான  தத்துவம்  கிடையாது,  வழிமுறை  கிடையாது,  தொலைநோக்கு  கிடையாது, தெளிவான  கொள்கைகளோ  வியூகங்களோ  கிடையாது.

பக்கத்தான்  அழிந்தொழிவதே  மலேசியாவுக்கு  நல்லது. என்னைக்  கேட்டால்  நஜிப்பை  அகற்றுவதைவிட  பயனற்ற  எதிரணியை  ஒழிப்பதற்கே  முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டும்  என்பேன். இப்படிப்பட்ட மடையர்களை  அகற்றி  விட்டால்  மலேசியாவுக்கு  முறையான  எதிர்காலத்தை  அமைத்துக்  கொடுக்கும்  பாதையாவது  தெளிவாகி  விடும்.

பெயரிலி 2287241438070669: பிகேஆர்  போட்டியிடும்  இடங்களில்  பிஎன்னுக்கே  வாக்களிப்போம்.

பெயரிலி 1371547149:  அஸ்மின்,  உங்கள்  பிரதிநிதிகள்  குழுவாக  இருந்து  செயல்பட  விரும்பவில்லை  என்றால்  பினாங்கு  அரசில்  அவர்கள்  இருக்கக்  கூடாது.

அடுத்த  தேர்தலில்   அவர்களைச்  சுயேச்சைகளாக  போட்டியிடச்  சொல்லுங்கள்.  பினாங்கில்  ஒரு  வாக்குக்கூட  கிடைக்காது.