முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிமும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக ஏற்பாடு செய்வதாகக் கூறப்படும் பேரணி ஒரு பொது ஆர்ப்பாட்டம் அல்ல.
அது மூடிய அறைக்குள் நடக்கும் ஒரு கூட்டமாகும் என ஜைட் கூறினார்.
“பலரும் மார்ச் 27 பேரணி பற்றிப் பேசுவதைப் பார்க்கிறேன். அது தலைவர்கள் ஒன்றுகூடி நடத்தும் ஒரு கூட்டம்தான்.
“அது தெரு ஆர்ப்பாட்டம் என்றோ பொதுமக்கள் கலந்து கொள்ளும் ஒரு பேரணி என்றோ நான் சொன்னதில்லை.
“அது பெர்சே போன்ற பேரணி அல்ல”, என்றாரவர்.
அரசியல்வாதிகளும் வழக்கறிஞர்களும் எப்படியும் சுற்றி சுழன்று பேசுவார்கள் என்பது ஊருக்கே தெரிந்த உண்மை.
நீங்கள்தான் உப்பு சப்பில்லா மனிதர் என்று நினைத்திருந்தேன். உங்களது அறிக்கைகளும் அப்படி பட்டதுதானோ?