1எம்டிபிமீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையைப் பொதுக் கணக்குக்குழு(பிஏசி)விடம் தாக்கல் செய்யும் நிகழ்வு மார்ச் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை முன்பு திட்டமிட்டப்படி நாளையும் வியாழக்கிழமையும் தாக்கல் செய்யப்படாது என பிஏசி தலைவர் ஹசான் அரிபின் கூறினார். பிஏசி உறுப்பினர்களில் பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.
“1எம்டிபிமீதான கணக்கறிக்கை தாக்கல் செய்யப்படும்போது பிஏசி உறுப்பினர்கள் அனைவரும் இருப்பது முக்கியமாகும்.
“எனவே 1எம்டிபிமீதான கணக்கறிக்கை வேறொரு நாளில் தாக்கல் செய்யப்படும். அனேகமாக மார்ச் முதல் வாரம் அது தாக்கல் செய்யப்படலாம்”, என ஹசான் ஓர் அறிக்கையில் கூறினார்.
1எம்டிபிமீதான கணக்கறிக்கை தாக்கல் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.