எம்பி: விமர்சனங்களை ஒடுக்குவதற்காக எம்சிஎம்சி சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டு வராதீர்

surநாடாளுமன்றம்,  அரசாங்கத்துக்கு  எதிரான  குறைகூறல்களை  ஒடுக்கும்  நோக்கில்  தொடர்பு,  பல்லூடகச்  சட்டத்துக்குத்  திருத்தங்கள்  கொண்டுவரக்  கூடாது  என  எதிரணி  எம்பி  ஒருவர்  வலியுறுத்தியுள்ளார்.

இப்புதிய  திருத்தங்கள்  அரசமைப்பு  வழங்கும்  கருத்துச்  சுதந்திரத்துக்கு   வேட்டு  வைப்பதாக   பாடாங்  செராய்  எம்பி  என்.சுரேந்திரன்  கூறினார்.

“இந்தத்  திருத்தங்கள்  வலைப்பதிவர்கள்,  டிவிட்டர்,  முகநூல்,  இன்ஸ்டாகிராம்  போன்ற  சமூக  வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர்  உள்பட   சாமானிய மலேசியர்களைக்  கடுமையாக  பாதிக்கும்”,  என்றாரவர்.

இத்திருத்தங்களின்கீழ் அபராதத்  தொகை  அதிகரிக்கும்  எனத்  தொடர்பு,  பல்லூடக  துணை  அமைச்சர்  ஜைலானி  ஜொகாரி  உறுதிப்படுத்தியுள்ளார்.  இப்போது  ரிம50,000 ஆக  உள்ள  அபராதத்  தொகை  ரிம500,000 ஆக  உயரும்.