அறிவுரை சொல்லும் தகுதி இல்லை: ரபிடாவைச் சாடினார் நஸ்ரி

nobodyஅம்னோ  உச்ச  மன்றம்   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கட்டுப்பாட்டில்  வைத்திருக்க  வேண்டும்  என்று  முன்னாள்  அமைச்சர்  ரபிடா  அசீஸ்  அம்னோ  அறிவுறுத்தியிருப்பதை  அம்னோ  உச்ச  மன்ற  உறுப்பினர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  நிராகரித்தார்.

ரபிடா   விரும்பியதைப்  பேசலாம்.  ஆனால்,  அவருடைய  பேச்சு  எடுபடாது  என  நஸ்ரி  கூறினார்.

“ரபிடா ஒரு  செல்லாக்காசு.  நம்  நாட்டில்  பேச்சு  சுதந்திரம்  உண்டு. அவர்  விரும்பும்வரை  குரைத்துவிட்டுப்  போகட்டும்”, என  நஸ்ரி  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

நீண்ட  காலம்  அம்னோ   மகளிர்  தலைவியாக  இருந்த  ரபிடா, நேற்று  செய்தியாளர்களிடையே  பேசியபோது,  உச்ச  மன்றம்  நஜிப்புக்கு  உள்ளதை  உள்ளபடி  எடுத்துரைக்க  வேண்டும்  என்று   குறிப்பிட்டு  அதை  வலியுறுத்த   சிறுவர்  கதையான   சட்டை  அணியாத  சக்கரவர்த்தி  கதையையும்  கூறினார்.