தெரு மோட்டார் சைக்கிள் பந்தயம்: கூ நானுடன் ஐஜிபி பேச்சு நடத்துவார்

matகோலாலும்பூர்  தெருக்களில்  அமெச்சூர்  மோட்டார்-சைக்கிள்  பந்தயத்தை  அனுமதிக்கலாம்  என்று  பரிந்துரைத்த  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்   தெங்கு  அட்னான்  மன்சூருடன்  அது  பற்றிக்  கலந்துரையாடப்  போவதாக  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்   தெரிவித்துள்ளார்.

“அவரால்  அதை  நியாயப்படுத்த  முடியும்  என்று  நம்புகிறேன்.  முதலில்  அவரைச்  சந்ந்தித்துப்  பேச  வேண்டும்”, என  ஐஜிபி  புக்கிட்  அமான்  போலீஸ்  தலைமையகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

வாரத்துக்கு  ஒரு  தடவை  அல்லது  இரண்டு  தடவை  தலைநகரின்  சில  தெருக்களை  மூடி  இளைஞர்களின்  மோட்டார்-சைக்கிள்  பந்தயத்துக்கு  இடமளிக்கலாம்  என  தெங்கு  அட்னான்  பரிந்துரைத்திருந்தார்.