கோலாலும்பூர் தெருக்கள் சிலவற்றை மூடி மாட் ரெம்பிட் மோட்டார்-சைக்கி்ள் பந்தயத்துக்கு இடமளிக்கலாம் என்ற பரிந்துரையைக் கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர் பிரிவு வரவேற்றுள்ளது.
அதன் தலைவர் ரஸ்லான் ரபி, அது சட்டவிரோத மோட்டார்-சைக்கிளோட்ட பந்தயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இளைஞர்கள் ஆக்ககரமான முறையில் பொழுதைக் கழிக்கவும் உதவும் என்றார்.
“மாட் மோட்டோர்கள் (ரெம்பிட்டுகள்) தங்கள் கைவரிசையை வெளிக்காட்ட பெரிதும் விரும்புவார்கள் என்பதால் இப்படிப்பட்ட பந்தயங்கள் புதுப்புது திறன்களை வெளிக்கொணரும்”, என்றார்.
ஞமலி புத்தி எவ்வழியில் போக வேண்டுமோ அவ்வழியில்தான் போகும். இளையோரை நல்வழிப்படுத்துவதை விட்டுட்டு நாசமாக போக வழிகாட்டும் அரசியல் கட்சி இந்நாட்டுக்குத் தேவையா?
அரசாங்கம் இதற்கு இடம் அலிககூடாது சட்ட விரோதம் தெரிந்து எப்படி இடம் அளிக்கலாம்?இதனால் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணி பார்க்க வேண்டும்.கை கால்கள் இழப்பு,வுயிர் இழப்பு வேண்டாம் இந்த சட்ட விரோத மோட்டார் பந்தயம்.
முட்டாள்தனமாக மோட்டார் செலுத்துங்கள் என அம்னோவே வழிவகுத்து சொல்கிறது.இதுதான் இன்றைய நாட்டின் நிலமை. நல்ல மக்களை உருவாக்க வேண்டிய அரசே இதுபோன்ற எதிர்மறைவான செயல்களுக்கு வழிவகுப்பது எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும்.மலேசியர்களுக்கு சவால் நிறைந்த எதிர்காலமே உருவாகபோகிறது.மாற்றம் இல்லேயேல் எதிர்காலம் கேள்விக்குறிதான்.