அம்னோ கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய தம்மை ஒரு “செல்லாக்காசு” என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ் சாடியிருப்பதை ரபிடா அசீஸ் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
“சிலருடைய பேச்சு இப்படித்தான் இருக்கும். இதுதான் அவர்களுக்குத் தெரிந்த மொழி”, என்று ரபிடா தம் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“கட்சியின்மீதும் நாட்டின்மீதுமுள்ள பாசத்தால் நான் நேர்மையாகவும் உளப்பூர்வமாகவும் தெரிவித்த அறிவுரைக்குக் கிடைத்த பரிசு இது. எல்லாம் தெரிந்த இறைவனிடமே விட்டு விடுகிறேன்”, என்று அந்த முன்னாள் அமைச்சர் கூறினார்.
“இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு எந்தப் பாதிப்புமில்லை”, என்று ரபிடா கூறினார்.
கட்சியில் செல்வாக்கில்லாத ரபிடா ஒரு “செல்லாக்காசு” என்றும் அவர் விருப்பம்போல் “குரைத்துவிட்டுப் போகட்டும்” என்றும் நஸ்ரி நேற்று கூறி இருந்தார்.
உனக்கு என்ன கவலை . மாமாக் இருந்தபோது நீர் எ.பி. வழி எவ்வளவு கொள்ளை அடித்தாய் . குண்டு மாமி நீயும் வகத்த வழியில் தான் , படாவி நஜிப செல் கிறார்கள். மக்கலுக்கு எல்லாம் தெரியும்
இது என்ன கருத்து சுதந்திரம்
உனக்குத்தான் சுடு சொரணை இல்லையே.
எவன் என்ன சொன்னால் உனக்கென்ன வேர்கவா போறது