பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டதன் விளைவாக பொதுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் 156-பேரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததற்கு அரசாங்கத்தைக் குறை சொல்லக்கூடாது என உயர்க்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதும் புதுப்பிக்காததும் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தது. அதற்கான அதிகாரம் அவற்றுக்குத்தான் உண்டு. அமைச்சுக்கு இல்லை என்றாரவர்.
“அந்த அதிகாரத்தைப் பல்கலைக்கழகங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அதை அவைதாம் முடிவு செய்ய வேண்டும். எல்லா நியமனங்களையும் செய்வது பல்கலைக்கழகங்கள்தான்.
“அவை அவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். அவர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கலாம்”, என்றாரவர்.