இக்லாஸ் தலைவரைக் கண்டித்தார் ஜோகூர் சுல்தான்

sul jஜோகூர்  சுல்தான்,  சுல்தான்  இப்ராகிம்  சுல்தான் இஸ்கண்டர்,  அம்மாநிலத்தில்  ‘வேப்’  பொருள்களுக்குத்  தடை  விதிக்கப்பட்டிருப்பது  குறித்து  கேள்வி  எழுப்பிய  மலேசிய  சிறிய,  நடுத்தர  தொழில்முனைவர்கள்  கூட்டமைப்பின் (இக்லாஸ்) தலைவர்  முகம்மட்  ரிட்சுவான்  அப்துல்லாமீது  அதிருப்தி  தெரிவித்துள்ளார்.

“….இக்லாஸ்  தலைவர்  ஒரு  மில்லியன்   பெயர்களைத்  திரட்டியிருப்பதாகக்  கூறிக்  கொண்டிருக்கிறார்.  எங்கே  அந்தப் பெயர்கள்?

“ஒன்றைக்கூட  நான்  இதுவரை  பார்க்கவில்லையே.  அறிவுகெட்ட  தனமாக  நடந்து  கொண்டு  பணத்துக்காக  மக்களின்  ஆரோக்கியத்துக்குக்  கேடு  செய்து  விடாதீர்கள்.

“பல  நிபுணர்களிடம்  கேட்டு  விட்டேன்.  வேப்  பயன்படுத்துவது  மனிதர்களுக்குக்  பெரும்  தீங்கை  விளைவிக்கும்  என்பது  தெளிவாக  தெரிகிறது”, என்று  சுல்தான்  கூறியதாக  பெர்னாமா  தெரிவித்துள்ளது.