நாளை கூடும் அம்னோ உச்சமன்றம் கட்சித் துணைத் தலைவர் முகைதினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று வதந்திகள் பெருகிவரும் வேளையில் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால்.
முகைதின், கடந்த ஆண்டு துணைப் பிரதமர் பதவியிலிருந்து தூக்கப்பட்டது முதல், கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைத்தான் குறைகூறி வந்திருக்கிறாரே தவிர, அம்னோவுக்குக் குழிபறிக்கும் வேலையைச் செய்ததில்லை என ஷாபி கூறினார்.
“அடிநிலை உறுப்பினர்களும், தலைவர்களும் கட்சியையும் அரசாங்கத்தையும் வலுப்படுத்தவே குறைகூறுகிறார்கள்.
“இப்போது கட்சியும் அரசாங்கமும் மக்களின் மனத்தைக் கவரவில்லை. அம்னோ உயர்த் தலைவர்களின் மனங்களில் மட்டுமே அவை ஓங்கி நிற்கின்றன.
“எனக்கும் கட்சிமீது பாசம் உண்டு. ஆனால் அதைவிட நாட்டின்மீது பாசம் அதிகம் . நாட்டின் இறையாண்மையும் வளமும் எந்தத் தனிப்பட்டவர் நலனையும் விடப் பெரிது”, என ஷாபி அப்டால் ஓர் அறிக்கையில் கூறினார்.