பொதுச் சேவைத் துறை(ஜேபிஏ) உயர்த் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவிச் சம்பளம் வழங்கும் கொள்கையை நிறுத்திக் கொண்டிருக்கிறதாம். அதற்குப் பதில் இனி கல்விக் கட்னகள் மட்டுமே வழங்கப்படுமாம். டிஏபி-இன் சிரம்பான் எம்பி அந்தோனி லோக் இவ்வாறு கூறினார்.
இம்மாற்றம் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் தம்மைத் தொடர்பு கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் அவ்விவகாரத்தில் தாமும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
பூமிபுத்ரா மாணவர்கள் உயர்கல்வி பெற அரசாங்கத்தையும் அதனைச் சார்ந்த பல நிறுவனங்களும் இருக்க பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு இருந்த உபகாரச் செலவு என்ற இந்த சலுகையும் போயிற்று! இதற்கு அமீனோ கட்சி அடிவருடிகளாக இருக்கும் இண்டிய மக்களைச் சார்ந்த குட்டிக் கட்சிகள் வாயைப் பொத்திக் கொண்டிருப்பது ஏன்? கிடைக்கும் சன்மானம் இல்லாமல் போய்விடும் என்ற பயம்தானே? இப்படி காசுக்குப் பிச்சை எடுத்து இன்டியாண்களை அடமானம் வைக்கும் இந்த வருபோகிகள் இருந்தால் என்ன இ’ர’ந்தால் என்ன?