தம் மகன் முக்ரிஸ கெடா மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்றப்பட்டதைப் பெரிய அவமானமாகக் கருதுகிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அதனால்தான் எவ்வகையிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதில் குறியாய் இருக்கிறார் என நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.
மக்கள் பிரதமருக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்று மகாதிர் அறைகூவல் விடுத்தது பற்றிக் கருத்துரைத்தபோது அம்னோ உச்சமன்ற உறுப்பினரான நஸ்ரி இவ்வாறு கூறினார்.
“மகன் வெளியேற்றப்பட்ட ஆத்திரம். மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறார். மகன் வெளியேற்றப்பட்டதைப் போல் நஜிப்பும் வெளியேற்றப்பட வேண்டும் என விரும்புகிறார். மகன் ஒரு தவணைக் காலம்கூட நீடிக்காததைப் பெரும் அவமானமாகக் கருதுகிறார்”, என நஸ்ரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
முதலில் உன் வாயை தைக்கணும்.
ஒரு சில வேளைகளில் அம்னோ வினரும் உண்மையை உளறிவிடுகின்றனர், இந்த நஸ்ரியை போல. மகனை[முக்ரிஸ்] கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதால், அப்பனுக்கு[மகாதிமிர்] கோபம் வருவது இயல்புதானே.
உன் மகனை முதலில் அடைக்கிவை!