ஆகாயப்படை விமானம் கோலா சிலாங்கூரில் அவசரமாக தரை இறங்கியது

rmafஇன்று  காலை  மணி  8.50  அளவில்  அரச  மலேசிய  ஆகாயப்  படையின்  சிஎன்235 ரக போக்குவரத்து  விமானமொன்று  கோலா  சிலாங்கூர்  அருகில்  சதுப்பு  நிலத்தில்  அவசரமாக  தரை இறங்கியதில் தீப்  பற்றிக்கொண்டது.

அதில்  எண்மர்  பயணித்தனர். அவர்கள்  அனைவரும்   பத்திரமாக  இருப்பதாய்  பெர்னாமா  கூறியது.

சுபாங்  விமானத்  தளத்தைச்  சேர்ந்த  அவ்விமானம்  அவசரமாக  தண்ணீரில்  தரை இறங்க  வேண்டிய  நிலை  ஏற்பட்டதாக  ஆகாயப்  படை  ஒர்  அறிக்கையில்  தெரிவித்தது.

அதில்  பயணித்த  எண்மருக்கும்  அங்குள்ள  மீனவர்கள்  உதவினார்கள்.

இவ்விபத்தை   ஆராய  விசாரணைக்  குழு  அமைக்கப்படும்  என  அரச  மலேசிய  ஆகாயப்படை கூறியது.