முக்ரிஸ்: முகைதினை விலக்குவது ‘அம்னோவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி’யாகும்

nailஇன்று  நடைபெறும்  அம்னோ  உச்சமன்றம்  அதன்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கக்கூடும்  என்று  தெரிவித்த  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர்,  அப்படி  எதுவும்  நடவடிக்கை  எடுக்கப்பட்டால்  அதுவே  ‘அம்னோவின்  சவப்பெட்டியில்  அறையப்படும்  கடைசி  ஆணி’யாக  அமையும்  என்று  எச்சரித்தார்.

இன்று  பிற்பகல்  கூடும்  அம்னோ  உச்சமன்றத்தில்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,   கட்சியின்  ஒழுங்கு  வாரியம்  முகைதினை  இடைநீக்கம்  செய்யப்  பரிந்துரைப்பார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம்  என்னவாக  இருந்தாலும்   தேர்ந்தெடுக்கப்பட்ட  கட்சித்  தலைவர்  ஒருவரை எளிதாக  பதவிநீக்கம்  செய்துவிட  முடியாது  என்று  முக்ரிஸ்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“மக்கள்  எழுப்பும்  பிரச்னைகள்  தொடர்பில்  உறுப்ப்பினர்கள்  கேள்வி  கேட்பதை  அம்னோ  அமைப்புவிதிகள்  தடுக்கவில்லை”, என்றாரவர்.