‘யாரைக் கேட்டு தெரு மோட்டார் பந்தயத்துக்கு இடம் ஒதுக்குனீர்கள்?’- குடியிருப்பாளர்கள் குமுறல்

racesகோலாலும்பூர்  மேயர்  முகம்மட்  அமின்  நோர்டின்  அப்துல்  அசீஸ்  தாமான்  மெட்ரோபோலிடன்  பத்து-வில்  மொட்டார்-சைக்கிள்  பந்தயங்களுக்கு  இடமொதுக்கிக்  கொடுக்க  முன்வந்ததற்கு  அப்பகுதிவாழ்  குடியிறுப்பாளர்கள்   கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

மோட்டார்-சைக்கிள்  பந்தயங்களூக்காக  ஒதுக்கப்படும்  சாலை  டிஏபி  செகாம்புட் எம்பி  லிம்  லிப்  எங்கின்  வீட்டு  வழியேதான்  செல்கிறது.

கூட்டரசுப்  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  மாட்  ரெம்பிட்கள்( சட்டவிரோத  மோட்டார்-சைக்கிள் பந்தயங்களில்  கலந்துகொள்வோர்)  மோட்டார்  பந்தயங்களில்  ஈடுபட  மாநகர்  மன்றம்  ஒரு  இடத்தை  ஒதுக்கிக்  கொடுக்கலாம்  என்று  பரிந்துரைத்தபோது  முதலில்  இருந்தே  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவித்து  வருவோரில்  லிம்மும்  ஒருவராவார்.

தன் வீட்டுக்கு  முன்புறமுள்ள  சாலையில்  மோட்டார்  பந்தயத்துக்கு  ஒதுக்கப்பட்டதாகக்  கூறிய  லிம்,   “மாநகர்  மன்றம்  தெரிந்துதான்  அதைச்  செய்ததா  என்பது  எனக்குத்  தெரியாது”, என்று  லிம்  கூறியதும்  செய்தியாளர்களிடையே  சிரிப்பலை  பரவியது.

மாநகர்  மன்றம்  வீடமைப்புப்  பகுதியில்  மோட்டார்-சைக்கிள்  பந்தயத்துக்கு  பாட்டை  அமைத்துக்  கொடுப்பதற்குமுன்  அங்குள்ள  மக்களின்  கருத்தை  அறிந்துகொள்ள  முற்படவில்லை  என்று  லிம்  கூறினார்.

“இன்று  செய்தியாளர்  கூட்டத்துக்கு  வருமுன்னர்  என் அண்டைவீட்டார்கள்  பத்து  பேரைக்  கேட்டேன்.  அனைவருமே  அதை  எதிர்க்கிறார்கள்.

“மாநகர்  மன்றத்தைக்  கேட்கிறேன். இந்த  ஆலோசனையை  முன்வைக்குமுன்னர் மக்களின்  கருத்தைக்  கேட்டீர்களா?”, என  லிம்  வினவினார்.