அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் அப்பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது உடனடியாக அமுலுக்கு வருகிறது.
இதனை அறிவித்த அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், அவரின் இடத்தில் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரான அஹமட் ஸாகிட் ஹமிடி பிரதமர் நஜிப்பால் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
முகைதின் யாசினின் இடைநீக்கம் அம்னோ உச்சமன்றத்தின் அடுத்த தேர்தல் வரையில் நீடிக்கும் என்று அட்னான் மேலும் கூறினார்.
இம்முடிவு இன்று நடந்த அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முகைதின் யாசின் பங்கேற்கவில்லை. அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்.
அடுத்த தேர்தல் வரைக்கும்,இனி முகதின் ஜீரோ.
தெய்வம் அனைவருக்கும் சமன், நல்லவர்களை பாதுகாக்கவும் , வஞ்சகர்களை தண்டிக்கவும் செய்வது உறுதி . இதுபோல பலர் விரைவில் தண்டிக்கபடுவர். வஞ்சகமாக இனவாரியாக மொழிவாரியாக கல்வி அமைச்சில் தன் கைவரிசையை காண்பித்த இந்த படிக்காத மேதை இறைவன் மென்மேலும் தண்டிப்பனாக . நன்றி .
ஆண்டவன் ஆகாசமத்தில் தூங்கு கிறானே.
முகிதீனும், முக்ரிசும் சந்தித்துக்கொல்வதை யாராவது பார்க்க நேர்த்ந்தால், என்னிடம் ஒரு பழைய பாடல் உள்ளது. அதை அன்பள்ளிப்பாக தந்துவிடுகிறேன், அதை கொண்டு போய் அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். பாடல் வரிகள் இப்படி வரும்: “உன் கதைதான் என் கதையும், என் கதைதான் உன் கதையும், பாதையிலே ஒரு மாற்றம், பயணத்திலே ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம்.”