இடைநீக்கம் முறைப்படி செய்யப்படவில்லை: முகைதின் காட்டம்

exdpmஅம்னோ  துணைத்  தலைவர்  பதவியிலிருந்து  நீக்கப்பட்ட  முகைதின்  யாசின்,  தம்மைப்  பதவிநீக்கம்  செய்த  உச்சமன்றம்  அதை  முறைப்படிச்  செய்யவில்லை  என்று  சாடியுள்ளார்.

பதவிநீக்கம்  செய்யுமுன்னர்  விளக்கம்  கேட்டு  கடிதம்  கொடுக்கப்படவில்லை,  தற்காத்துக்  கொள்ளவும்  வாய்ப்பு  வழங்கப்படவில்லை  என்றாரவர்.

“ஒழுங்கு   வாரியத்தின்  விசாரணைக்கு  என்னை  அனுப்பவில்லை.  சாதாரண  உறுப்பினர்களுக்குக்கூட  அவர்களைத்  தற்காத்துக்கொள்ள வாய்ப்பு  கொடுக்கப்படுகிறது. ஆனால்,  நான்  உடனடியாக  தண்டிக்கப்பட்டேன்”,  என்றாரவர்.

“உச்சமன்றம்  என்னை  வெளியேற்றுவதற்குக் காத்திருந்ததுபோல்  தெரிகிறது”, என  முகைதின்  இன்று  ஒர்  அறிக்கையில்  கூறினார்.

இடைநீக்கத்தை  எதிர்த்து  முகைதின்   முறையீடு  செய்ய மாட்டார்.