நஜிப்: இது சர்வாதிகார அரசல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு

dicஅரசாங்கம்   சர்வாதிகாரமாக  நடந்து  கொள்வதில்லை.  மாறாக,  நாடாளுமன்ற  ஜனநாயகத்தைப்  பின்பற்றி  அரசியல்  நிலைத்தன்மைக்குத்தான்  அது  முன்னுரிமை  அளித்து  வருகிறது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  வலியுறுத்தினார்.

“இது  யதேச்சாதிகார  அரசாங்கமுமல்ல;  நாங்கள்  சர்வாதிக்காரத்துடன்  நடந்து  கொள்வதுமில்லை.

“நாம்  நாடாளுமன்ற  ஜனநாயகத்தைப்  பின்பற்றுகிறோம்; ஐந்து  ஆண்டுகளுக்கு  ஒரு  முறை  மக்கள்  அவர்கள்  விரும்பும்  அரசாங்கத்தைத்  தேர்ந்தெடுக்கும்  உரிமையை  அவர்களுக்குக்  கொடுக்கிறோம்”, என்று  நஜிப்  இன்று  பூச்சோங்கில்  கூறினார்.

நஜிப்பைக்  கடுமையாக  விமர்சித்து  வரும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நாடு  வட  கொரியா  போன்று  மாறி  வருவதாக  நேற்று  கூறியிருந்தார்.