பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதிகாரங்களைத் தம் கைக்குள் வைத்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரியாக மாறி வருகிறார் என அம்னோ துணைத் தலைவர் பதவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முகைதின் யாசின் கூறுகிறார்.
“மக்களின் ஆத்திரத்தை எதிர்நோக்கும் நஜிப், கருத்து மாறுபடுவோரையும் குறைகூறுவோரையும் ஒடுக்க தம்மிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
“உண்மையில் ஜனநாயக அமைப்புமுறைகளின் வீழ்ச்சியையும் ஒரு புதிய சர்வாதிகாரியின் உருவாக்கத்தையும் கண்டு வருகிறோம்”, என முகைதின் இன்று காலை ஒர் அறிக்கையில் கூறினார்.
ஆமாம்! சர்வாதிகாரம்தான். என்ன செய்ய முடியும் உம்மால்?வாயைப் பொத்திக் கொண்டு ‘கம்’முனு இருக்கணும். இல்லாவிட்டால், அன்வாரைப் போல ‘உம்’முன்னு ஆக்கிடுவோம், ஜாக்கிரதை!
இந்நாட்டில் சர்வாதிகாரம் ஏற்படுவதற்கு சட்டத்தில் வழிவகைகள் செய்து வைத்தது யார்? அமீனோ அரசாங்கம்தானே!. அதில் இந்த அறிவு ஜீவியும் கூட்டுக் களவானிதானே? அப்புறம் ஏன் இந்த கூப்பாடு? கண் கெட்டப் பிறகு சூரிய வணக்கமோ?
சர்வாதிகாரம் அம்னோவிற்கு என்ன புதியதா ? முகைதினுக்கு இப்போதுதான் தெரிகிறதாம், பின்னால எரிகிறதாம்.
எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். பிரச்சனை ஏற்பட்ட பிறகுதான் ஞானம் பிறக்கிறது– காகாதிமிருக்குதான் இதைப்பற்றி முழுமையாக தெரிந்து இருக்கும்.