அரசுத் தொடர்புள்ள எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றிவிடப்பட்டதற்கான ஆதாரங்கள் தம்மிடம் காண்பிக்கப்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறுகிறார்.
அந்த ஆதாரங்களிலிருந்து ஒரு குற்றச்செயல் நிகழ்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது என்றாரவர்.
“எஸ்ஆர்சி இண்டர்நேசனலிலிருந்து நஜிப்பின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றிவிடப்பட்டிருப்பதாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (அப்துல் கனி பட்டேல்) என்னிடம் தெரிவித்தார். அது ஒரு குற்றச்செயல்தான் என்பதற்கான ஆதாரங்களையும் காண்பித்தார்”, என முகைதின் கூறினார்.
இதற்கு மேலும் சட்டத் தலைவர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது தகுமோ?. இந்த அமீனோ அரசாங்கத்திற்கு ஓட்டுப் போட்ட மக்கள் கடவுளை நம்புபவர்களா? நம்புவோர் என்று சொன்னாலே பெரிய ஆச்சரியம் காரணம் களவானிப் பயன்களுக்கு தடம் போட்டுக் கொடுப்போரும் ஏதோ ஒரு வகையில் களவானிகளே! இவ்வகையோர் அவர்தம் ஊழ்வினைப் பயனை அனுபவித்தேஆக வேண்டும்.
பிரதமரோ அல்லது சட்டத்துறைத் தலைவர் அப்பாண்டியோ, முன்னாள் துணைப் பிரதமர் முகைதீன் மீது அவதூறு வழக்கை பதிவு செய்யலாமே? எல்லாம் வண்டவாளமும் கந்தலாகிவிடும் (பீஸ் பீசாக) என்ற அச்சம் தடுக்கிறதோ??
எந்த குற்ற செயலும் இந்த அம்னோ ஆட்சியில் இருக்கும் வரை குற்ற செயல் ஆகாது– பெரும்பாலான மலாய்க்காரனுக்கு அது தன்னுடைய இனத்துக்காக செய்யும் நல்ல செயல். இந்த நிலையில் வேறு எப்படி இவன்களின் மனப்போக்கு இருக்கும்? இவன்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்படிருக்கிறது–கொடுக்கப்படுகிறது- 57ல் இருந்த நிலை என்ன இப்போதைய நிலை என்ன ? முன்னேற கூடாது என்று சொல்ல வில்லை– நம்மை எல்லாம் வேண்டும் என்றே ஓரங்ககட்டி விட்டு எல்லாம் அனுபவிப்பது நியாயமா? சுதந்திரம் மூன்று இனங்களின் உழைப்பு. அம்நோவினுடையது மட்டும் அல்ல.