பார்டி அமானா நெகாரா, மலேசியாவைப் பாதுக்காக்க பாடுபடும் எந்தத் தரப்புடனும் ஒத்துழைக்கத் தயார் என அறிவித்துள்ளது.
நாட்டின் இப்போதைய நிலவரத்தைச் சுட்டிக்காட்டிய அமானா தலைவர் முகம்மட் சாபு, நாட்டின் “நன்மதிப்பை” நிலைநாட்ட நாட்டு மக்கள் அவர்களால் இயன்றதைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“ஊழலையும் அதிகாரமீறல்களையும் நிராகரிக்கும் எந்த இயக்கத்துடனும் ஒத்துழைக்க அமானா தயார். நாட்டில் முழுமையான சீரமைப்புகளைச் செய்வதன்வழி நடப்பு அரசாங்கத்தை ஜனநாயக வழிமுறையில் மாற்றி அமைக்க வேண்டும்”, என்றாரவர்.
அப்படியானால், அம்னோவுக்கு எதிர்ப்புக் காட்டும் முகமாக அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடனும் அமானா ஒத்துழைக்குமா என்று வினவியதற்கு எந்தத் தரப்புடனும் அது ஒத்துழைக்கும் என்றார்.