காலைநேரப் பசியாறலுக்கு மலேசியர்களில் பெரும்பாலோர் நாடுவது ரொட்டி சானாய்தான். அந்த ரொட்டி சானாயின் விலை இனி உயரக்கூடும்.
கோதுமை மாவுக்கு வழங்கி வந்த உதவித் தொகையை அரசாங்கம் இன்று முதல் நிறுத்திக்கொண்டிருப்பதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. இதனால் ரிம33.75 ஆக இருந்த கோதுமை மாவு(25 கிலோ கிராம் பை) விலை இப்போது ரிம42 ஆகியுள்ளது.
ப்லாண்டாவும் மைதாமாவும் சேர்த்து செய்யும் ரொட்டி சானாய் மாரடைப்பு வர இந்த உணவுகளும் ஒருகாரணம்…
உணவே மருந்து .
வீட்டில் சமைத்து சாப்பிடாமல் ஓடி ஓடி வேலைசெய்து பணம்தேடி கடைகளில் சுகாதாரமற்ற உணவை உண்டு சிறுக சிறுக சேர்த்து வைத்தபணத்தை தனியார் மருத்துவமனையில் ஆபரேசனுக்காக சேமிப்பையெல்லாம் கொட்டி பலபேரு பிணமாக வீடு வருகிறார்கள் !!
இலட்சங்களை சேர்த்து நோயாளியாக அலைவதைவிட அன்னாடம் காட்சியாக இருந்து உடல் நலத்தோடு வாழ்வதே சிறப்பானது …
சரியாக சொன்னீர்கள் அய்யா த.எ.பறை. இன்று உலகில் சைவமா, அசைவமா என்று படித்தவர்கள் கூட, உணவு முறையில் தடுமாறுகிறார்கள். அசைவ உணவைவிட சைவ உணவே சிறந்தது. உதாரணம் சித்தர் முனிவர் என்பவர்களுக்கு 100 ஆண்டுகள் என்பது சர்வ சாதாரணம். இன்றும் இந்திய கிராமங்களில் 110 ஆண்டுகள் வாழும் முதியவர்களை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். அய்ரோப்பாவில் 110 ஆண்டுகள் என்றால், ஊடகங்களை அழைத்து விளம்பர படுத்துவார்கள். இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் அவர்களின் ஆயுசு எவ்வளவு என்று. தோட்ட புரத்தில் பால்மரம் வெட்டுபவரான நான் கால் பாகத்தில் சொறி போன்ற தோல் நோயால், ஏறக்குறைய 20 ஆண்டுகள் அவதிபட்டேன். தமிழ் மருத்துவரின் ஆலோசனைபடி, உணவு முறையில் 90 சதவிகிதம் சைவ உணவுக்கு மாறியவுடன் தோல் நோயும் பெருமளவு குறைந்து விட்டது. உடல் உபதைகளும் குறைந்து விட்டது. தெரியாமல நாம் முன்னோர்கள் சொன்னார்கள் சைவ உணவே சிறந்தது என்று. இங்கே கொல்லாமை என்கிற இறை சித்தாந்தமும் சேர்ந்து கொள்கிறது. நன்றி த.எ. பறை.
மைதாமாவை வெள்ளை வெளேரென ஆக்குவதற்கு ஏகப்பட்ட ரசாயனங்களைச் சேர்க்கிறார்களாம். இந்த ரசாயனங்கள் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய தன்மை உள்ளதாம். இது ஒரு மருத்தவரின் குற்றச்சாட்டு!