‘தேசிய விவகாரங்கள்’ குறித்து மகாதிர், கிட் சியாங் கூடிப் பேசினர்

kit sதேசிய  விவகாரங்கள்  குறித்துப்  பேசுவதற்காக    முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைச்  சந்தித்ததாகத்  தெரிவித்த  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  அச்சந்திப்பு  நாடு  எதிர்நோக்கும்  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காணும்  நம்பிக்கையைத்  தந்திருப்பதாகக்  கூறினார்.

அம்னோவிலிருந்து  விலகிய  மகாதிர்,  அடுத்து   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை   வெளியேற்றும்  இயக்கத்துக்குத்  தலைமை  தாங்கக்  கூடும்  என்ற   ஊகங்கள்  பெருகிவரும்  வேளையில்   இச்சந்திப்பு  நிகழ்ந்துள்ளது.

“மகாதிரைச்  சந்தித்து  நாட்டின்  நடப்புப்  பற்றி  விவாதித்தேன். ஜைட்  இப்ராகிமையும்  சந்தித்து  அவரது  மார்ச்  27  கூட்டம்  பற்றிப்  பேசினேன். அவை  முட்டுச்  சந்தில்  சிக்கிக்கொண்டிருக்கும்   தேசியப்  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காண  முடியும்  என்ற  ஊக்கத்தைத்  தந்துள்ளன”, லிம்  கூறினார்.

டிஏபி  ‘மலேசியாவைக் காக்கும்’  முயற்சிக்கு  முழு  ஒத்துழைப்பு  வழங்கும்  என்று  அறிவித்த  லிம்  அது  பற்றி  மேலும்  விவரிக்கவில்லை.