WSJ உறுதி செய்யப்பட்ட உண்மைகளைப் புறக்கணிப்பது ஏன்? அரசாங்கப் பேச்சாளர் சாடல்

reportwபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  இருந்த  பணம்  சவூதி  அராபியாவிடமிருந்து  கிடைக்கப்பெற்ற   நன்கொடை  என்பதை “பல  அமலாக்க  அமைப்புகள்”  உறுதிப்படுத்திய  பிறகும்
அப்பணத்தை  1எம்டிபியுடன்  தொடர்புப்படுத்திப்  பேசும்  வால்  ஸ்திரிட்  ஜர்னலை  மலேசிய  அரசாங்கம்  சாடியுள்ளது.

“அப்பணம்  சவூதி  அராபியாவிடமிருந்து  வந்த  நன்கொடை  என்பதை  மலேசிய  சட்டத்துறைத்  தலைவர்  கூறியுள்ளார்.

“அதன்மீது  விரிவான  விசாரணை  நடத்திய  சட்ட  அதிகாரிகள்  பலரும்  அதை  உறுதிப்படுத்தினர்.  மலேசிய  அதிகாரிகள்  சவூதி  சென்று   ஆவணங்களை  ஆராய்ந்ததுடன்   அந்நாட்டு  அரச  குடும்பத்தினரையும்  விசாரித்துள்ளனர்.

“பணம்  சவூதி  அராபியாவிலிருந்து  வந்ததுதான்  என்பதை  சவூதி  வெளியுறவு  அமைச்சரும்  உறுதிப்படுத்தினார்.”, என  அரசாங்கப்  பேச்சாளர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

ஆனால், அவர்களோ  எந்த   ஆதாரமுமின்றிப்  பழைய  குற்றச்சாட்டையே  திரும்பத்  திரும்பக்  கூறி  வருகிறாரக்ள்.  பெயர்  தெரியாதவர்கள்  சொல்வதை  நம்புகிறார்கள்.  தெரிந்த  உண்மைகளைப்  புறக்கணிக்கிறார்கள். இது  ஏற்றுக்கொள்ளப்பட்ட பத்திரிகைத்  தர்மத்துக்கு  முரணானது  என்றாரவர்.

“வால்  ஸ்திரிட் ஜர்னல்,   சுய  லாபத்துக்காக  பிரதமரையும்  மலேசியாவையும்  களங்கப்படுத்த  முனையும்   குறிப்பிட்ட   சில  அரசியல்வாதிகளின்  கைப்பாவையாக  மாறி  இருக்கிறது. மேற்கத்திய  ஊடகங்களைப்  பயன்படுத்தி  அரசியல்  நோக்கத்துடன்  நடத்தப்படும்  இந்த  நஜிப்- எதிர்ப்பு-இயக்கம்  தோற்று  விட்டது”, என்றும்  அவர்  சொன்னார்.