பிரதமர் நஜிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டால், அவரின் இடத்தில் அமர்வதற்கு முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி ஆகிய மூவரும் தகுதியுடையவர்கள் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார்.
அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ கவிழ்க்கப்பட்டால், அரசாங்கத்தை வழிநடத்துவதற்குத் தேவையானவை எனக் கருதப்படுவதை இம்மூவரும் கொண்டிருக்கின்றனர் என்றாரவர்.
அன்வாரோ, மகாதீரோ பிரதமர் ஆகலாம். புதிய முகமான அஸ்மின் ஒரு நல்ல தலைவர். அமனாவிலும் சிலர் இருக்கின்றனர். அம்னோவில்கூட, முகைதின் யாசின் இருக்கிறார் என்று மலேசியாகினி, எப்எம்டி மற்றும் பெரித்தா டெய்லி ஆகியவற்றுக்கு இன்று கூட்டாக அளித்த நேர்காணலில் ஸைட் இப்ராகிம் இவ்வாறு கூறினார்.
இப்பதவியில் உட்கார நீண்ட காலமாக ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர், அன்வார் இப்ராஹிம். அவருக்கு ஒரு வாய்ப்பளிப்பதில் தவறேதும் இல்லை.
அன்வார் பிரதமர் ஆவதற்கு தகுதி உடையவரே .
மலாய்க்காரன் தான் பிரதமன் ஆகா வேண்டுமா முடியுமா? தகுதி உள்ள மற்ற இன மலேசியர் பிரதமன் ஆகக்கூடாதா?. ஒரு பிரதமன் மலேசியர் யாவருக்கும் பிரதமன் ஆக இருக்க வேண்டும். காகாதிமிர் ஒருதலை பட்சமான இன வெறியன் – இவனால் தானே இவ்வளவும்? இவன் திருந்தி விட்டானா என்பது சந்தேகமே.
மடையர்கள் நஜிபின் சுண்டுவிரலை கூட அசைக்க முடியாத இவர்கள் இப்பொழுதே பதவிக்கு கனவு காண்கிறார்கள் . இந்த நாடு உருபடவேண்டுமணல் ஒரு சீனனை முதல்வராக்கி பார்க்கலாம் அதற்க்கு அருகில் இருக்கும் சிங்கபூரே ஒரு உதாரணம் .
இருவருமே பிரதமர் பதவிக்குத் தகுதி இழந்தவர்கள். ஒருவர் சட்டத்தின் அடிப்படையில் தகுதி இழந்தவர் மற்றவர் புத்தி பேதலித்துப் போனவர். புதியதாக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டத்தில் மலேசிய மக்கள் இருக்கின்றோம்.