ஒரு புதிய இளைஞர் அமைப்பு பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கிறது

groupநேற்று  சேலஞ்சர்  என்ற  இளைஞர்  அமைப்பு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தலைமைத்துவம்  நாட்டை  அழிவுக்கு  இட்டுச்  செல்லும்  என்று  கருத்துத்  தெரிவித்திருந்தது.  இன்று   வேறு  சில  இளைஞர்  தலைவர்கள்  நஜிப்புக்கு  ஆதரவாகக்  கருத்துத்  தெரிவித்தனர்.

இந்தப்  புதிய  அமைப்பில்  யுஐடிம்  மாணவர்  மன்ற  முன்னாள்  தலைவர்  ஆபாங்  முகம்மட்  ஹவிசி  ஆபாங்  பன்சும்  பல்வேறு  பல்கலைக்கழகங்களின்  இளைஞர்  தலைவர்களும்  இடம்பெற்றுள்ளனர். இந்த  அமைப்பு,  சேலஞ்சர்  பதிவு  செய்யப்பட்ட  அமைப்பு  அல்லவென்றும்   அதனால்  அது  மலேசிய  இளைஞர்களைப்  பிரதிநிதிக்கவில்லை  என்றும்  குறிப்பிட்டது.

சேலஞ்சர்  பிகேஆர்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ரபிஸி  ரம்லிக்கு  ஆதரவாகக்  குரல்  கொடுத்ததிலிருந்தே  அது  எதிரணியின்   கூட்டாளி  என்பது  தெரிகிறது  என்று  அது  கூறியது.

ரிம2.6 பில்லியன்  நன்கொடை  விவகாரத்தில்  நஜிப்  குற்றம்  எதுவும்   செய்யவில்லை  எனச் சட்டத்துறைத்  தலைவர்  அபாண்டி  அலி  தெளிவுபடுத்தியுள்ளதைச்  சுட்டிக்காட்டிய  அந்த  அமைப்பு  பிரதமருக்கு  எதிரான  குற்றச்சாட்டுகள்  வெறும்  பிரச்சாரங்களே  தவிர  வேறொன்றுமில்லை  என்று  கூறிற்று.

“அனைத்துல  அளவில்   அங்கீகரிப்பட்டிருக்கும்  பிரதமரின்  தலைமைத்துவத்தை   நாங்களும்  ஏற்கிறோம்.

“மத்திய  கிழக்கு,  சீனா,  அமெரிக்க,  ஐரோப்பிய  நாடுகள்  நஜிப்பின்  தலைமையை  மதிக்கின்றன”,  என்று  அது  குறிப்பிட்டது.