மலேசிய அரசியல் வானம் நாளொரு மாற்றமும் பொழுதொரு வண்ணமும் பெற்று வருகிறது. ஆகக் கடைசியாக வந்துள்ள செய்தி- நாளை டாக்டர் மகாதிர் முகம்மட்டும் பக்கத்தான் ஹராபானும் கூட்டாக செய்தியாளர் கூட்டம் நடத்தப் போகிறார்களாம்.
இதைத் தெரிவித்திருப்பவர் அவரோ இவரோ அல்ல, மகாதிரின் ஜன்ம பகைவராகக் கருதப்படும் அன்வார் இப்ராகிமின் புதல்வியும் பிகேஆரின் உதவித் தலைவருமான நூருல் இஸ்ஸா அன்வார்.
“ஆம். நாளை பிற்பகல் மணி 3.30-க்கு துன் மகாதிருடன் சேர்ந்து செய்தியாளர் கூட்டம் நடத்தப் போகிறோம்.
“அதில் எல்லா விவரங்களும் வழங்கப்படும்”, என்றாரவர்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். இப்பொகூட மக்களூக்காக போரடவில்லை.உன்மகனுக்காக போரடுகிராய்.
இதன் மூலம் ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என நம்புவோம் .
எதற்காக இப்பொழுது மாமக்தீருடன் கை கோர்க்க வேண்டும். ஏன் நஜிப் சென்றுவிட்டால் இந்த நாட்டில் எல்லாம் சரியாகி விடுமா? எதுவும் சரியாகப் போய்விடப் போவதில்லை. ஒரு திருடன் போனால் இன்னொரு திருடன் வரப் போகின்றான். அதனால் நாம் அறிந்த திருடனே நல்ல திருடன் என்று அறிந்து இந்தியர் ஒதுங்கி இருப்போம்.
இது, கூட்டு ‘செய்தியாளர்’ கூட்டம் அல்ல. கூட்டு ‘சதியாளர்கள்’ கூட்டம் என்பதே சரி.
அய்யோ, அய்யோ, இன்னுமா இந்த வேண்டாத வியாக்கியானம், ”ஒரு திருடன் போனால் இன்னொரு திருடன் வரப் போகின்றான்.” ராமர் ஆண்டால் என்ன? ” ராவணன் ஆண்டால் என்ன? ” என்று நாம் விலகிக்கொள்ளுவதே நமது கடந்தகாலம் தவறுகள். நாம் நமக்குள் ஒரு கோடு போட்டுக்கொண்டு வாழ்ந்தது நமக்கு தீமையையே கொண்டுவந்துள்ளது. ஒரு மாற்றம் நமக்கு 100 % நன்மையை கொண்டு வராது என்பது உண்மை, அதனால் அநீதியை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிடுவது அறிவுடமையாகாதே!