ஆசியாவின் மிகப் பெரிய கடனாளிகள் மலேசியர்களாம்

manuமலேசியர்களில்  68 விழுக்காட்டினர்  கடன்காரர்களாக  இருப்பதை  அண்மைய  Manulife  ஆய்வு  ஒன்று  காண்பிக்கிறது. ஆசியாவின்  எட்டுச்  சந்தைகளில்-  ஹொங் காங்,  சீனா,  தைவான்,  ஜப்பான்,  சிங்கப்பூர்,  மலேசியா,  பிப்பீன்ஸ்,   இந்தோனேசியா  ஆகிய  நாடுகளில்-  அவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. மற்ற  நாடுகளில்  சராசரி  33  விழுக்காட்டினர்  கடனாளிகளிகளாக  இருக்கிறார்கள்.

மலேசியர்கள்  சராசரி  கடன் தொகை  ரிம56,000. இது  அவர்களின்  மாத  வருமானத்தைவிட  பத்து  மடங்கு  அதிகமாகும். அன்றாடச்  செலவுகள்,  வாடகை,  பிள்ளைகளின்  கல்விச்  செலவு  என்ற  வகையில்  பெரும்பாலோர்  கடனாளிகளாக   உள்ளனர்.

“வருத்தம்தரும்  விசயம்  என்னவென்றால்  பெரும்பாலானவை   நீண்டகாலக்  கடன்களாகும். கடனாளிகளில்  கால்வாசிப்   பேருக்கு  மூன்றாண்டுகளில்  அல்லது  அதற்குப்  பிறகும்கூட  கடனைத்  திருப்பச்  செலுத்த  முடியும்  என்ற  நம்பிக்கை  இல்லை”, என்று  அவ்வாய்வு  கூறியது.

முறையான  திட்டம்  இல்லை.  அதுதான்  கடனாளிகள்  எண்ணிக்கை  உயர்ந்திருப்பதற்குக்  காரணம்  என்றும்  அது  குறிப்பிட்டது.