எக்கோனமிஸ்ட்: நஜிப்பால் மலேசியாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை

econபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பாணியில்  ஆட்சி  நடக்கும்  வரையில்  உலகில்  அதற்கு  உரிய  அங்கீகாரம்  மலேசியாவுக்குக்  கிடைக்கப்போவதில்லை  என  உலகப்  புகழ்பெற்ற  வாராந்திர  சஞ்சிகையான  தி   எக்கோனமிஸ்ட்  கூறுகிறது.

நேற்று  அதில்  வெளியிடப்பட்டிருந்த  கட்டுரை  ஒன்று,  அம்னோவிடம்  கருத்துப்  பஞ்சம்  ஏற்பட்டிருக்கிறது  என்றும்  கட்சித்  தலைவரின்  நேர்மையே  கேள்விக்குரியதாக  மாறியிருப்பதால்  அது  புத்துயிர்  பெறும்  வாய்ப்பே  இல்லை  என்றும்  குறிப்பிட்டிருந்தது.