நஜிப் அப்துல் ரசாக் தொடர்ந்து அம்னோ தலைவராகவும் பிரதமராகவும் இருந்தால் அடுத்த பொதுத் தேர்தல் கெடாவை பிஎன் இழக்க நேரும் என முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார்.
“அவர் தொடர்ந்து கட்சித் தலைவராக இருந்தால் 14-வது பொதுத் தேர்தலில் (கெடாவில்) வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கெடாவில் பிஎன் வெற்றிபெற நஜிப் இரண்டு பதவிகளையும் விட்டு வெளியேற வேண்டும். பெக்கான் எம்பி அதிகாரத்தில் உள்ளவரை அம்னோ இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறாது என முக்ரிஸ் கூறினார்.


























நீங்கள் கெடாவில் ஜெவிச்சா , நாட்டை பிடித்த பீடை என்னாவது. மக்கள் பீடையை ( அம்னோவை) விரட்டுனும் பாடுபடுறாங்களே!
அட பாவி முக்ரிஸ் ! அம்னோவும் BN தொலைந்தால் தான் நாடே உருப்படும் !