வீடமைப்பு அதிகாரிகள் என ஏமாற்றிக் கொண்டிருக்கும் கும்பலிடம் கவனம் தேவை: பினாங்கு அரசு எச்சரிக்கை

jadeepவீடமைப்புத்துறை  அதிகாரிகள்போல்   வேடமிட்டு  கட்டுப்படியான விலை-வீடுகளை  வாங்கித்  தருவதாகக்  கூறி  மக்களிடம்  பணம்  வசூலித்து   வரும்  ஏமாற்றுப்  பேர்வழிகளிடம்  கவனமாக  இருக்குமாறு  பினாங்கு  அரசு  எச்சரித்துள்ளது.

“ வீடமைப்புத்  துறை  வீடுகளுக்கு  விண்ணப்பம்  செய்வோரிடம்  பணம்  வசூலிப்பதில்லை”, என  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்(வீடமைப்பு)  ஜக்தீப்  சிங்  கூறினார்.

“எம்பிகள்,  சட்டமன்ற  உறுப்பினர்கள், ஆட்சிக்குழு  உறுப்பினர்களைக்  கொண்ட  எட்டுப்  பேரடங்கிய  வாரியம்  விண்ணப்பத்தாரர்களைத்  தேர்ந்தெடுக்கிறது. அதற்கு  ஒரு  காசும்  கொடுக்க  வேண்டியதில்லை”,  என்றாரவர்.