ரிக்டர் கருவியில் 5.3 என்று பதிவான மிதமான நடுக்கம் இன்று அதிகாலை 4.20க்கு சுமத்ராவின் தென்மேற்குப் பகுதியைத் தாக்கியதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்தது.
அந்நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சிபெருட்டிலிருந்து தென்மேற்கே 604கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக மெட்மலேசியா கூறிற்று.
அந்நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என்றும் அது தெரிவித்தது.