துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சாபாவில் கிழக்குக் கரையில் மட்டுமல்லாமல் மேற்குக் கரையிலும் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கிறார்.
“முன்பு சாபாவின் கிழக்குக்கரையில் மட்டுமே அச்சுறுத்தல் நிலவியது. அங்கு பாதுகாப்புப் பணிகள் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது பாதுகாப்பு மிரட்டல் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரைக்கும் விரிவடைந்துள்ளது.
“சாபாவின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சுல்தானின் தளபதிகள் நியமிக்கப்பட்டிருப்பது உளவுத்தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது ஒரு கடுமையான பாதுகாப்பு விவகாரம். நாட்டுக்கு உண்மையில் மிரட்டல் அளிக்கும் விவகாரமாகும் ”, என ஜாஹிட் இன்று கோட்டா கினாபாலுவில் கூறினார்.
இது என்ன நாடகம் ? உளவு துறையிடம் இருந்து தகவல் வந்து விட்டது அல்லவா நீ போய் பாதுகாப்பை உசுபடுத்து. உனக்கு தான் நஜிபின் கொ– துக்குவடர்க்கே நேரம் போடவிலையே. பிறகு நாடு எப்படி போனால் உனக்கு என்ன? அவர்களாக வரவில்லை என்றாலும் நீங்களாக வரவைத்து விடுவிர்கள்.