கடந்த வாரம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் எதிர்கட்சித் தலைவர்களுடனும் என்ஜிஓ-களுடனும் இணைந்து பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து நீக்குவதுதான் அவர்களின் நோக்கம்.
அதற்கு எதிர்வினையாக, பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்கம் ஒன்று உருவாகி, சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
“#RespectMyPM” என்ற இயக்கம்தான் அது. நஜிப்பைப் பாதுகாக்க, அது அவரின் ஆதரவாளர்களை அழைக்கிறது.
அந்த இயக்கம் தொடர்பான சுவரொட்டிகளில் ஜாலோர் கெமிலாங் படம் இருக்கிறது. மாநிலக் கொடிகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் “I am Malaysian and I…#RespectMyPM (நான் மலேசியன். நான் என் பிரதமரை மதிக்கிறேன்)” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
சபாஸ் சரியான போட்டி.
இதிலிருந்து புரிய வேண்டும் எவ்வழிகளில் 2.6 பில்லியன் உபயோகப்படுத்தப்படுகிறது. பணம் பாதாளம் வரை பாய்கிறது . நாட்டையே சுரண்டி தானும் தன்னுடைய அடிவருடிகளுமே அனுபவிக்கவேண்டும் அத்துடன் பல குற்ற சாட்டுகளுக்கு இன்றும் பதில் இல்லை– இவனுக்கு மரியாதையா?
சூடு பிடித்தால் மதிப்போம்! சூடு பிடிக்காவிட்டால் மிதிப்போம்!