‘பேரரசரைச் சிறுமைப்படுத்தினார்கள்’ என கிட் சியாங், மாட் சாபு, மலேசியாகினிமீது போலீசில் புகார்

picடிஏபி  பெருந் தலைவர்  லிம்  கிட்  சியாங்,  அமானா  தலைவர்  முகம்மட்  சாபு  ஆகியோர்மீதும்  மலேசியாகினியின்மீதும்    போலீஸ்  புகார்கள்  செய்யப்பட்டுள்ளன.

மலேசியாகினியில்  நேற்று வெளியிடப்பட்டிருந்த   Kerajaan sediakan titah Agung, kata Kit Siang (பேரரசரின்  உரையைத்  தயாரித்துக்  கொடுத்தது  அரசாங்கம்- கிட்  சியாங்  கூறுகிறார்)  என்ற  செய்திதான்  புகார்களுக்கான  காரணமாகும்.  அச்செய்தியில்,  பேரரசர்  அரசாங்கம்  தயாரித்துக்  கொடுத்திருந்த  உரையைத்தான்  வாசித்தார்  என  கிட்  சியாங்  குறிப்பிட்டிருந்தார்.

அதன்  தொடர்பில்  செந்தூல்,  வங்சா  மாஜு,  ரவாங்  ஆகிய  மூன்று  போலீஸ்  நிலையங்களில்  தனித்தனியே  புகார்கள்  செய்யப்பட்டன.

“அச்செய்தியை  முழுமையாக  படித்துப்  பார்த்த  பின்னர்  அது  பேரரசரை  அவமதிக்கும்  செய்தி  என்பதை  உணர்ந்தேன்.

“கருத்துத்  தெரிவித்த  லிம்  கிட்  சியாங்கும்   முகம்மட்  சாபுவும்  அதை  வெளியிட்ட  மலேசியாகினியும்  பேரரசரைச்  சிறுமைப்படுத்தும்  நோக்கம்  கொண்டிருந்தார்கள்  என்பது  தெளிவாகத்  தெரிகிறது”,  எனப்  புகார்தாரர்களில்  ஒருவரான  முகம்மட்  கைருல்  அசாம்  அப்துல்  அசீஸ்  செந்தூல்  போலீஸ்  நிலையத்துக்கு  வெளியில்  கூறினார்.