நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் நிராகரிப்பை அடுத்து திரெங்கானு சட்டமன்றம் ஒத்திவைப்பு

assemதிரெங்கானு சட்டமன்றத்தில் மந்திரி  புசார்  அஹ்மட்  ரஸிப்  அப்துல்  ரஹ்மானுக்கு  எதிராகக்  கொண்டுவரப்பட்ட  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானம்  நிராகரிக்கப்பட்டது  ஏன்  என  அடுக்கடுக்காகக்  கேள்விகள்  எழுந்ததைத்  தொடர்ந்து  மன்றத் தலைவர்  முகம்மட்  சுபிர்  எம்போங்  கூட்டத்தை  ஒத்திவைத்தார்.

“நான்  முடிவு செய்தாயிற்று.  சட்டமன்றக்  கூட்டத்தை  நாளைவரை  தள்ளி  வைக்கிறேன்”, என்று  சொல்லிவிட்டு  முகம்மட்  சுபிர்  மன்றத்தினின்றும்  வெளியேறினார்.

பதில்  சொல்ல  முடியாமல் “ஓடுகிறார்”  என  எதிரணி  உறுப்பினர்  ஒருவர்  கிண்டலடித்தார்.

முன்கூட்டியே  அறிவிப்பு  கொடுக்கப்படவில்லை  என்ற  காரணத்தைக்  காண்பித்து  முகம்மட்  சுபிர்  தீர்மானத்தை  நிராகரித்தார்.

ஆனால்,   நம்பிக்கை- இல்லாத்  தீர்மானத்துக்கு முன்  அறிவிப்பு  தேவையில்லை  என்றும் மாநில  அரசமைப்பு  விதிகள்  அதைத்  தெளிவாக  எடுத்துரைப்பதாகவும்  தீர்மானத்தைக்  கொண்டு  வந்த  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்டும்   பிகேஆரின்   பண்டார்  சட்டமன்ற  உறுப்பினர்  அஸான்  இஸ்மாயிலும்  வாதிடுகின்றனர்.