குடிமக்கள் பிரகடனத்தால் பெர்சேயில் பிளவு

berமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டையும்  எதிரணியினரையும்,  சிவில்  அமைப்புகளையும்  ஒன்றுபட  வைத்த  குடிமக்கள்  பிரகடனம்  சில  இடங்களில்  கருத்து  வேறுபாட்டை  ஏற்படுத்திப்  பிளவினை  உண்டுபண்ணியுள்ளது.

எதிரணியினரிடையே  மட்டுமல்லாமல்  சமூக  அமைப்புகளிலும்கூட   அப்பிரகடனம்  தொடர்பில்  கருத்து  வேறுபாடுகள்  தோன்றியுள்ளன,  குறிப்பாக  பெர்சேயில்.

பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா பிரகடனத்தில் கையெழுத்திட்டதை  பெர்சேயில்  இணைந்துள்ள  மூன்று  அமைப்புகள்  சாடியுள்ளன.

“செய்த  தவறுகளுக்காகக்  கொஞ்சமும்  வருந்தாத  ஒரு  எதிரியுடன்  பெர்சே  தலைவர்   எந்தவொரு  நிபந்தனையுமின்றி சமரசம்  செய்துகொண்டிருப்பதை   எங்களால்  ஏற்க  முடியவில்லை.

“ஒத்துழைப்பு  என்பது  உளப்பூர்வமானதாக  இருக்க  வேண்டும். இப்பிரகடனத்தில்  உண்மையிலேயே  ஜனநாயகத்தை  அல்லது  நீதியை  நாடும்  வேட்கையைக்  காண  முடியவில்லை”, என  அம்மூன்றும்  அறிக்கை  விடுத்துள்ளன.

அக்கூட்டறிக்கையில்  கையொப்பமிட்டுள்ள  Mama Bersih, Johor Yellow Flame, and Sunflower Electoral Education  ஆகிய  மூன்றும்,   பிரகடனம்  நஜிப்பைப்  பதவியிலிருந்து  வெளியேற்றிவதில்தான்  குறியாக  இருக்கிறதே  தவிர  அரசியல்  மாற்றம்  குறித்து  எதுவும்  தெரிவிக்கவில்லை  என்று  கூறின.