நஜிப் கெடாவைக் ‘கவிழ்க்கவில்லையா’, எம்பி கேள்வி

nailபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கை  தப்பு  என்றால்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரை  வெளியேற்ற  அம்னோ  தலைவர்  கையாண்ட  உத்தி  மட்டும்  சரியா  என்று  எதிரணி  எம்பி  ஒருவர்  வினவுகிறார்.

கேள்வி  எழுப்பியவர்  பாஸ்  கட்சியின்  பொக்கோக்  சேனா  எம்பி  மாபூஸ்  ஒமார். பெட்ரோனாஸ்  ஆலோசகர்  பதவியிலிருந்து  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நீக்கப்பட்டிருப்பது  குறித்து  கருத்துரைத்த  மாபூஸ், நஜிப்பைப்  பதவி  விலகக்  கோரும்  குடிமக்களின்  பிரகடனத்தில்  மகாதிர்  கையொப்பமிட்டது  எந்த  வகையில்  சட்டத்துக்குப்  புறம்பானது  எனக்  கேள்வி  எழுப்பினார்.

இதே  முறையில்  செயல்பட்டுத்தானே  முக்ரிஸைப்  பதவியிலிருந்து  தூக்கினார்கள்   என்றவர்  குறிப்பிட்டார்.

“பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்களிடம்  கட்டாயப்படுத்தி  வாங்கப்பட்ட  சத்திய  பிரமாணங்களை  வைத்து  முக்ரிஸை  கெடா  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  அகற்றினார்களே, அது    சட்டப்பூர்வமானதா?”,  என  மாபூஸ்  வினவினார்.