குடிமக்கள் பிரகடனம் குறித்து பெர்சேயில் இடம்பெற்றிருக்கும் அமைப்புகள் சில மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதை பெர்சே இயக்கக் குழு அறிந்தே உள்ளது. ஆனாலும், பெரும்பான்மை உறுப்பினர்கள் அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா பிரகடனத்தில் கையெழுத்திட்டதை வரவேற்கிறார்கள் என்று அது கூறியது.
“மகாதிரின் முன்னெடுப்பில் உருவான ஒரு பிரகடனத்தில் மரியா கையொப்பமிட்டது சில என்ஜிஓ-களுக்குப் பிடிக்கவில்லைதான்.
“ஆனால், பெரும்பான்மை என்ஜிஓ-கள் மரியாவுக்கு ஆதரவாக இருக்கின்றன.
“கருத்து வேறுபாடு கொள்ள மக்களுக்குள்ள உரிமையை மதிப்பதுபோல் குடிமக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட மரியாவும் மற்றவர்கள் செய்த முடிவையும் மதிக்கத்தான் வேண்டும்”, என அக்குழு இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
பெர்சேயில் இடம்பெற்றுள்ள Mama Bersih, Johor Yellow Flame, Sunflower Electoral Education ஆகிய மூன்று அமைப்புகளும் மரியா பிரகடனத்தில் கையெழுத்திட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன..
“செய்த தவறுகளுக்காகக் கொஞ்சமும் வருந்தாத ஜனநாயகத்தின் எதிரி” என்று மகாதிரை வருணித்த அவை, அவருடன் சேர்ந்து பணியாற்ற மரியா முடிவெடுத்ததைக் கண்டித்தன.